உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் சகல தேர்தல் தொகுதிகளிலும் கட்சி அலுவலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிக்கொத தலைமையகம் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களைக் கேட்டுள்ளது.
இவ்வலுவலக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு கட்சித் தலைமையகம் விசேட குழுவொன்றை அமைத்துள்ளதாகவும், இக்குழு சகல தொகுதிகளுக்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் பின்னர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கட்சித் தலைமையக வட்டாரங்கள் அறிவித்துள்ளன.