புதிய அரசியலமைப்புக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  வாக்களிக்க வேண்டும் – எல்லே குணவங்ச தேரர்

12628 49

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் கோரியுள்ளார்.

அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை குறித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment