உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏனைய சிறு கட்சிகள் புதிதாக முளைப்பது போல முளைத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து சென்றுள்ளன.
எனினும், அவை ஒன்றும் வெற்றிபெறவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெரும் எனத் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.