சுதந்திர கட்சியிடமிருந்து இதுவரை அழைப்பு இல்லை – பெசில்

245 0

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலுக்கும் முகம்கொடுக்க தயார்.

தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் தாம் தேர்தலுக்குத் தயாராவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய சில அரசியல் கட்சிகள் தம்முடன் இணைந்து போட்டியிட தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment