தெற்காசியாவில் பாரிய கடன்சுமைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள நாடு இலங்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையிலுள்ள பொருளாதாரத்துக்கு மத்தியில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது மற்றும் வருமானத்தை அதிகரிகரிப்பது என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, கடன்களை செலுத்த முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.