சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு – புதிய மனு தாக்கல்

287 0

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்க வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றில்  புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு 5 முக்கிய கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு தீர்வு காண வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேற்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 50 சதவீதம் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது சிறப்பு ஜூரி (நடுவர்) விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Leave a comment