ரூ.40 கோடி நிலமோசடி நில மோசடிகள் வழக்கில் தொழில் அதிபர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்குமார். நகை கடை அதிபர். பாரிமுனை என்.எஸ். சி.போஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கிழக்கு கடற்கரையில் செய்யூரில் 40.19 ஏக்கர் நிலத்தை கீழ்பாக்கம் விவேக் அன்கோ உரிமையாளர் சந்திர சேகர செட்டியிடம் விலைக்கு வாங்கி இருக்கிறார்.
ரூ.27.55 கோடி விலை பேசப்பட்டு ரூ.23.25 கோடிக்கு வங்கி காசோலையும் வழங்கி இருக்கிறார்கள். பின்னர் ரூ.21 கோடிக்கு மேல்செலவு செய்து அணுகுசாலை, காம்பவுண்டு சுவர் எழுப்பி அந்த நிலத்தை சீரமைத்து இருக்கிறார்கள்.
இதன்மூலம் ரூ.40 கோடிக்கு மேல் செலவிட்ட நிலையில் அந்த நிலத்தை விக்னேசுக்கு கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
இதையடுத்து விக்னேஷ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து சந்திர சேகர செட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நில மோசடிகள் வழக்கில் தொழில் அதிபர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.