தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு கொங்கு நாடு கட்சி ஆதரவு: ஈஸ்வரன் அறிக்கை

259 0

நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையினால் மிகுந்த பாதிப்பை சந்தித்த சிறு தொழிற்சாலைகள், வணிகர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிப்பிலிருந்து கைகொடுத்து மேலே தூக்கி விடுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு இதுவரை செயல்படுத்தாதது வேதனையளிக்கிறது.

ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி அதிக வேலை வாய்ப்பை தருகின்ற ஜவுளித் தொழில், சிறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்களையும் மேலும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment