சகோதரர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதபடுகொலைச் சம்பவம் ஒன்றில் அவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்ததால் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரதிவாதிகளான சகோதரர்கள் இருவருக்கும் கொழும் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் விசாரணைகள் இன்று கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
45 மற்றும் 47 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.