வீதிப் போக்குவரத்து சம்பந்தமாக அரசாங்கத்தின் புதிய சட்ட திட்டங்கள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என்று வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய அதிகாரசபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.
அதன்படி போக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்காக 25,000 ரூபா தண்டம் அறவிடுவது சம்பந்தமான திருத்தங்களும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட உள்ளது.
அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது, வேகத்தை கட்டுப்படுத்தல், ஒரே தடவையில் ஏற்றிச் செல்ல முடியுமான பயணிகளின் அளவை வரையறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வௌியிடப்படும் என்று சிசிர கோதாகொட கூறினார்.
இதற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது தலைக்கவசம் அணிவது சம்பந்தமான புதிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட உள்ளது.
தண்டம் அறவிடுவது தொடர்பாக திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்ட உடனேயே அது நடைமுறைக்கு வரும் என்பதுடன், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தமான புதிய சட்டதிட்டங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய அதிகாரசபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.