தொண்டமான் பெயரை அகற்றியமைக்கு எதிர்ப்பு – பொகவந்தலாவையில் தீவிர நிலை

322 0

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் இன்று (27) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்பாட்டம் பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியை மறித்து பொகவந்தலாவ செல்வகந்தை சந்தியில் உள்ள பாலத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் பி.சக்திவேல், பிலிப் மற்றும் இ.தொ.கா.வின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன் போது பொகவந்தலாவ செல்வகந்தியில் உள்ள பாலத்தின் இருந்து ஆரம்பிக்கபட்ட ஊர்வல பேரணி பொகவந்தலாவ தபால் நிலையம் வரை சென்றடைந்தது.
இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 350 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Leave a comment