பசுக்களை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பசுக்களை எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்போது துரிதமாக அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக, கால்நடைக் கைத்தொழிலுக்கும், விவசாயத்துறை தேவைப்பாடுகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி கால்நடைகளை கொண்டு செல்வதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை அதன்பொருட்டு அனுமதிப் பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் கால்நடைகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்களை பிரதேச செயலாளர் ஊடாகவே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.