நாட்டின் மேல் , சப்ரகமுவ , மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை மறுநாள் தொடக்கம் மழை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.