அர்ஜூன் அலோசியஸ்க்கு  விசாரணை-குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 

276 0

ஆரம்ப சாட்சிகளை மறைத்தமை மற்றும் தொடர்பாடல் பதிவுகளை அழித்தமை தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு அறிவித்ததாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளளது.

Leave a comment