சர்வதேச தரம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை விநியோக நடவடிக்கை இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்ககே ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
20 வருடங்கள் பயன்படுத்தக் கூடிய பிரகாரம் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. bar code உடன் கூடிய இந்த அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாதவாறு தயாரிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் எனவும் கூறப்படுகின்றது.