ராஜபக்ஷ கால ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஆணைக்குழு?

257 0

நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்த ராஜபக்ஷவின் பிரபல கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி விசாரிப்பதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆவணங்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை அடுத்தவார ஆரம்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அக்கடிதத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கையெழுத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக ஜனாதியாபதி ஆணைக்குழுவின் விசாரணைகளைப் போன்றே, ஹேஜிங் கொடுக்கல் வாங்கல், க்ரீக் பினைமுறி கொடுக்கல் வாங்கல், உமா-ஓயா வேலைத்திட்டம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமானச் சேவையில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நிறுவி தினந்தோறும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் ஜனாதிபதி அதிக அக்கறை செலுத்தாமையே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கக் காரணமெனவும் இது தொடர்பிலான ஜனாதிபதியின் பதிலை அடுத்து அவர்களது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment