அரியாலை இளைஞன் படுகொலை விவகாரம், கடற்படையும் காரணமா..?

271 0

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞனின் மரணம் குறித்த விசாரணைக்காக கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினர் மண்டைதீவு கடற்படை முகாமில் நேற்று தேடுதல் நடாத்தியுள்ளனர்.

அரியாலை உதயபுரத்தில் கடந்த 22ஆம் திகதி இளைஞன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் சோகத்துடன் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கொலையாளி பயணித்த வாகனத்தை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே தேடுதல் நடத்தியுள்ளனர்.

குறித்த கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதவானிடம் கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இருப்பினும் தேடுதல் மேற்கொண்டவர்களுக்கு எவ்வித ஆதாரமும், தடயமும் கிடைக்காததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a comment