ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை

249 0

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதான தெரிவித்து கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் கொலை குற்றவாளிகளாக நிரூபிக்கப்ட்டமையை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆர் ஹெயின்துடுவ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் இந்திக்க பொன்சேகா என்பவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் 40 மற்றும் 45 வயதுடைய சகோதரர்கள் இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆர் ஹெயின்துடுவ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Leave a comment