முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணம்!

219 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

இவர் நாளைய தினம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பௌத்த மற்றும் கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கேற்பதற்கும் முதலாவதாக உரை நிகழ்த்துவதற்குமே இவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாளை தினம் இலங்கையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளாரா என கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்திடம் வினவிய போது இதற்கு பதிலளித்த இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், அவ்வாறான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டார்.

Leave a comment