சதொச ஊழியர்கள் சிலரை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு சுமார் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழங்கு எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதி வரை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2010, 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் 150 ஊழியர்களின் உத்தியோகபூர்வ வேலைக்கு பதிலாக அவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமைக்காவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.