யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி. ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
தனது நண்பர் கொடுத்த கடனை திருப்பித் தராத காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்காலை செய்துகொண்ட நிலையில் இன்று தாய் மற்றும் 3 பிள்ளைகள் இவ்வாறு நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குறித்த நால்வரும் ஐஸ்கிறீமிற்குள் நஞ்சுமருந்தை கலந்துசாப்பிட்டே தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய தாயாரான சுநேத்திரா, 2 வயதுடைய இரண்டைக் பிள்ளைகள் (மகன்மார் ), மற்றும் 4 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு நஞ்சருந்தி உயிரிழந்துள்ள நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கர்சா, சஜித், சரவணா பிள்ளைகளின் பெயர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொணடு வருவதாகவும் யாழ் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.