அரசியலமைப்பு குறித்த தமது கட்சித் தலைவர் விமல் வீரவன்சவின் உரையை, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க விமர்சித்தது தவறு என்று தேசிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை இன்று (27) சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பியறிசியின் செயலுக்காக அவருக்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, கட்சி ஆலோசனையின் பின்னரே அது குறித்துத் தெரியவரும் என்று ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
‘பாராளுமன்றில் குண்டு வீசப்பட வேண்டும்’ என்ற விமலின் கருத்து தனிப்பட்டதே என்றும், இதற்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பியசிறி தெரிவித்திருந்தார்.