சுதந்திர கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றிய தீர்மானம் நாளை மறுதினம்

239 0

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்வது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பாகவும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான பல தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment