மோட்டார் வாகனங்கள் தொடர்பான அரசின் புதிய சட்டங்கள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானி அறிக்கைகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
அதன்படி மோட்டார் வாகனங்கள் தொடர்புடைய பல குற்றங்களுக்கான தண்டப்பணம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியவகையில் குறித்த வர்த்தமானி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துதல், வேகத்தை கட்டுப்படுத்தல், பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய எண்ணிக்கையை கட்டுப்படுத்தல், உள்ளிட்ட விதிகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கான தலைக்கவசம் அணிதல் தொடர்பிலான புதிய சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தாலும் வெளியிடப்படவுள்ளது.
தண்டப்பணம் திருத்தம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அது உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய சட்டங்கள் எதிர்வரும் வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் எனவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.