சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று மாலை – லக்ஷமன் கிரியெல்ல

256 0

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான இறுதித் தீர்மானம் பெரும்பாலும் இன்று மாலை அறிவிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் சில நாட்களாக இது தொடர்பாக இடம்பெற்று வந்த கலந்துரையாடல்களின் மூலம் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் இதன் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் தர நிர்ணயங்கள் தயாரிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் நடாத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகத் அமைச்சர் கிரியெல்ல இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment