உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனவும் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி வர்த்தமானி வெளியிடப்படுமாயின், ஜனவரி மாதம் தேர்தலை நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டிருந்தார்.