சென்னை எழும்பூரில் உள் கவின் கலை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, சக மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் (வயது 24). சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், பிரகாஷ் அடுக்கம்பாறையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்றிரவு, அடுக்கம்பாறை அருகே உள்ள குழவிமேடு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் சக மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு துறைத்தலைவர் தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவ-மாணவிகள் இன்று கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கல்லூரி முதல்வர் கூறும்போது, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவர் பிரகாஷிடம் உறுதி அளித்திருந்ததாக கூறினார்.