சென்னை ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க மனுத்தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுடன் சேர்த்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்திருந்தார். டிசம்பர் இறுதிக்குள் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சுமார் 46 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.