விழாக் காலங்களை முன்னிட்டு ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட பயணிகளிடம் ரூ.86 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விழாக் காலங்களை முன்னிட்டு ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தெற்கு ரெயில்வேயில் உள்ள விஜிலென்சு துறையினர் கடந்த மாதம்(செப்டம்பர்) 9-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர்.
மொத்தம் 452 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.86,052 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் பயணிகளின் நலன் கருதி ரெயில் நிலையங்களில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என தெற்கு ரெயில்வேயின் விஜிலென்சு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.