இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நீடிப்பின் அடிப்படையில், இந்தியர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தொழிற்சார் வீசா வழங்கலில் எந்த நேரடி சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற தெரிவு செய்யப்பட்ட துறைகள் சார்ந்த இந்திய பணியாளர்களுக்கான வீசா மற்றும் தொழில் அனுமதியில் சில தளர்வுகள் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘மோட் 4’ எனப்படும் தனிநபர் சுயாதீன நகர்வுக்கு புதிய சுதந்திர வர்த்தக நடவடிக்கையில் இணக்கம் காணப்படவில்லை.
எனினும் மோட் 3 எனப்படும் குறிப்பிட்ட சில துறை சார்ந்த பணியாளர்களுக்கான சலுகைகள் மாத்திரம் இலங்கையில் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதாபெஸ்ட்டில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் ஒன்றின் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பதாக, த பிஸ்னஸ் ஸ்டேண்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.