வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்

341 0

4414வடக்கு மாகாணத்திற்குச் சென்று பார்த்தபோதே தனக்கு இலங்கையின் உண்மை நிலை தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.

அவர் தனது இலங்கை தொடர்பான பயணம் குறித்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் கொழும்பு மிகவும் வளமான நகரமாக உள்ளது. கொழும்பு மாத்திரம் இலங்கையல்ல.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டபோதே எனக்கு உண்மை நிலை புரிந்தது. அங்கே மக்கள் வறுமையாலும், வாழ்வாதாரம் இன்றியும் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்கின்றதை அவதானிக்க முடிந்தது.

காணாமல்போனோரின் உறவுகள் மிகவும் பரிதாப நிலையிலுள்ளனர். அவர்களுக்கு விடிவுகாலம் ஏற்படுத்தப்படவேண்டும். இங்கு காணாமல்போனோர் அலுவலகம் மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.