காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாக TNA நடவடிக்கை- பா.அரியநேத்திரன்

361 0

DSC08407காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை எடுத்துவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,காணாமல்போனவர்கள் போனர்வகளை கண்டறியப்படவேண்டும் என்பதற்காக 26வருடங்களுக்கு பின்னர் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம்.90ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு படுகொலைச்சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.சித்தாண்டி முருகன் ஆலயத்தில் இருந்து அழைத்;துச்செல்லப்பட்டவர்கள் கும்புறுமுலை இராணுவ முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக அன்றைய காலப்பகுதியில் கூறப்பட்டது.இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரங்களுக்கு பிறகு கிழக்கு பல்லைக்கழகத்தில் இருந்து 153 பேர் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்.

இவர்கள் எங்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்,அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத சூழ்நிலையிலேயே நாங்கள் இன்றுவரையில் இருந்துவருகின்றோம்.காணாமல்போனவர்களின் பிரச்சினையென்பது சர்வதேச மயப்படுத்தப்பட்ட பிரச்சினையாக இன்று மாறியுள்ளது.அதேபோன்று எமது விடுதலைப்போராட்டமும் இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்ட பிரச்சினையாக மாறியுள்ளது.இது தொடர்பிலேயே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் காணாமல்போனோர் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பிலான காரியாலயம் ஒன்று இயங்குவதற்கான ஒப்புதலும் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.

90ஆம் ஆண்டுக்கு முன்னைய காலம் 90க்கு பிந்தைய காலம் 2009க்கு பிந்தைய காலம் என பல்வேறுபட்ட காலப்பகுதியில் பெருமளவிலானோர் காணாமல்போயிக்கொண்டுள்ளனர்.தற்போதும் ஒரு சில பகுதிகளில் இந்த காணாமல்போகும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.இது தொடர்பில் கண்டறிந்து அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறுகின்ற கடப்பாடு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் காணாமல்போனவர்கள் விடயம் தொடர்பில் வெளிப்படையாக ஒரு ஆர்ப்பாட்டத்தினை ஒரு கவன ஈர்ப்பினை செய்யமுடியாத நிலைமையிருந்தது.அவ்வாறான நிகழ்வு நடைபெறும்போது அவர்கள் மிரட்டப்படும் நிகழ்வுகளே நடைபெற்றன.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பல்வேறுபட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை மாத்திரம் நடாத்தக்கூடிய ஒரு சுதந்திரம் இன்று உருவாகியுள்ளது.இந்த நிகழ்வில் கூட சில புலனாய்வாளர்கள் கண்காணித்துக்கொண்டுள்ளனர்.பொதுமக்களை அச்சுறுத்தும் அவர்களை ஒரு மனநிலையில் வைத்திருந்து எச்சரிக்கும் நடவடிக்கைகள் எல்லா அரசாங்க காலத்திலும் இருந்துவருகின்றது.இங்கு காணாமல்போனவர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை இந்த நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசமும் எடுக்கவேண்டும்.காணாமல்செய்யப்பட்டவர்களின் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் நாங்கள் மௌனமாக இருக்காமல் இவ்வாறான கவன ஈர்ப்பு போராட்டங்களை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டும்.வடமாகாணத்தில் இவ்வாறான சம்பங்களுக்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.கிழக்கிலும் இவ்வாறான காணாமல்போனர்கள் மற்றும் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி போராட்டங்கள் நடாத்தப்படவேண்டும்.அதற்கான முழு ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும்.காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை எடுத்துக்கொண்டுள்ளது.