வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட உள்ள 50 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்ற அடிப்படையில் குறித்த பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, குறித்த வீட்டுத் திட்டத்தில் இந்த மாவட்ட முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய ஆறு மாவட்டங்களிளுக்கு அவசியமான முறையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டம் தொடர்பான பயனாளிகள் தெரிவும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கணவர்மாரை இழந்த பெண்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரல்கள், விசேட தேவையுடையோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்