விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய இறைமைக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் ஆற்றிய உரையில் இந்திய இறைமையை பாதிக்கும் வகையான கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பில் சீமான் மற்றும் திரைப்பட இயக்குனர் ஐ.அமீர் சுல்தான் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
எனினும் ஏற்கனவே இவ்வாறான வழக்குகளில் இந்தியாவின் மேல் மற்றும் உயர் நீதிமனங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில், குறித்த இரண்டு பேருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட குற்றங்கள் சட்டவிரோதமானவை இல்லை என்று நீதிபதி டி. லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் 9 வருடங்களாக தொடர்ந்த இந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.