திருகோணமலை அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்திற்குள் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை மூன்று மாணவர்களை கைது செய்துள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் 11ம் மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் எனவும் காந்திநகர் -மட்கோ போன்ற இடங்களைச்சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தீவிர வழசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.