விஞ்ஞானி அல்பெர்ட் அயின்ஸ்டெயினின் குறிப்பேடுகள் ஏல விற்பனை

333 0

புகழ்பெற்ற விஞ்ஞானி அல்பெர்ட் அயின்ஸ்டெயினால் எழுதப்பட்ட இரண்டு குறிப்பேடுகள் 1.56 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை ஆகி இருக்கிறது.

ஜெருசலேத்தில் இந்த ஏலவிற்பனை இடம்பெற்றுள்ளது.

1922ம் ஆண்டு டோக்கியோவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது பொதுசேவை நிறுவன பணியாளர் ஒருவருக்கு அவர் குறித்த குறிப்பேடுகளை வழங்கினார்.

அயின்ஸ்டெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றுடன், அவர் தங்கி இருந்த அறைக்கு சென்ற குறித்த பொதி சேவை நிறுவனத்தின் பணியாளருக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு அயின்ஸ்டெயினிடம் பணம் இருக்கவில்லை.

இந்தநிலையில் வாழ்க்கையில் மகிழ்சியாய் இருப்பதற்கான தத்தும் என்று பெயரில் இரண்டு குறிப்புகளை வழங்கிய அயின்ஸ்டெயின், நீங்கள் அதிஸ்டசாலி என்றால் இந்த குறிப்புகள் பெறுமதிமிக்கதாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறிப்பில் புகழ்பெற்ற ‘றூநசந வாநசந’ள ய றடைடஇ வாநசந’ள ய றயல’ என்ற வாசகமும் அடங்கும்.

Leave a comment