தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமான மது பாவனைக்கு அடிமையாகி இருக்கும் நிலைமை கவலைக்குரியது என்று தொழிலுறவு அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தோட்டப் பகுதிகளில் இவ்வாறு சட்டவிரோதமான மது வகைகளின் பாவனை அதிகரித்திருப்பதால், அவற்றை பாவிக்கின்றவர்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதித்து வருகிறது.
இதில் இருந்து மீள வேண்டியது கட்டாயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடினப்பட்டு உழைக்கும் பணத்தை பெரும்பாலும் இவ்வாறான மதுபாவனையில் வீணடிக்கும் அவர்கள், பல்வேறு நோய்களையும் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.