மாகாண சபை உறுப்பினரின் மனைவிக்கு விளக்கமறியல்

267 0

திவுலபிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான மேல்மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் மனைவி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வத்தளை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டியவில் காவற்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொள்ளையாளர்கள் சிலருக்கு இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் எந்தலையில் உள்ள அவரின் வீட்டிலிருந்து, நூற்றுக்கும் அதிகமான கைதுப்பாக்கி ரவைகள், வாள் ஒன்று உட்பட வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்தே அவரின் மனைவி கைதுசெய்யப்பட்டார்.

அவர் இந்திய நாட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளளனர்.

Leave a comment