சடலம் ஒன்றை வைத்து ஆர்ப்பாட்டம்

293 0

தலவாக்கலை கிரேட்வெஸ்ட்டர்ன் தோட்ட மக்கள் சடலம் ஒன்றினை வீதியில் வைத்து ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவர்கள் இன்று பிற்பகல் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிரேட் வெஸ்ட்டர்ன் தோட்டத்தினை சேர்ந்த 40 வயதுடைய ஆர் இலட்சுமன் கடந்த 22 ஆம் திகதி புகையிரத பாதையில் நடந்துச்செல்கையில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் தவறி விழுந்த குறித்த நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க தோட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதோடு, நோயாளர் காவு வண்டி காணப்பட்ட போதிலும் அவரை மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்ல முடியாத நிலை நிலவியதாலும் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த தோட்டத்தில் வசிக்கும் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டம் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave a comment