அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமை தொடர வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.
இதையடுத்து, அரசாங்கத்திடம் சமர்ப்பித்த கேள்வித்தாள் ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
சமஷ்டி முறைமையொன்றுக்கு செல்லும் யோசனையுடன் தாம் உடன்பாடு காணவில்லை என்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உதய ரொஹான் டி சில்வா கூறியதாக தெரவிக்கப்பட்டுள்ளது.