மாரடைப்பால் இறந்த மீனவருக்கு காப்புறுதி இழப்பீடு

304 0

மட்டு.மாவட்டத்தில் மாரடைப்பால் இறந்த மீனவருக்கு முதன்முறையாக கடற்றொழில் அமைச்சினால் காப்புறுதி இழப்பீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்து அவர்களது வாழ்க்கை தரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டலில் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக மாரடைப்பினால் மரணமான ஏழை மீனவர் ஒருவருக்கு தியவர திரிய திவிசயுர திட்டத்தின்கீழ் இரண்டு இலட்சம் ரூபாய் காப்புறுதி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பினால் மரணமான வாகரை கதிரவெளியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் குமரகுரு என்ற மீனவருக்கே இவ் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் வைத்து உதவி பணிப்பாளர் மரணமாவரின் மனைவியிடம் இழப்பீட்டிற்கான காசோலையை கையளித்தார்.

இதுவரை இம்மாவட்டத்தில் மீனவர்; காப்புறுதித் திட்டத்தில் 1885 மீனவர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தககது.

Leave a comment