பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் 6 வாரங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் அதன் இறுதி அறிக்கையை தயாரித்து முன்வைப்பதற்காக இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தமது அதிகாரக்காலத்தை மேலும் நீடித்தளிக்குமாறு, குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.