அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நிலவுகின்ற தடங்கல்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளது எண்ணிக்கையை அதிகரிப்பது சம்பந்தமாக முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த விபரங்களை அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தருகிறார்.