அனுராதபுரம் சிறையில் 30 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று அல்லது நாளை விலக்கிக் கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான தங்களின் வழக்கு விசாரணைகளை மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கே மற்றுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைதானவர்களுடன் தங்களையும் தடுத்து வைக்காக்காதிருத்தல் போன்றவை தொடர்பில்; நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை தமக்கு வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே வழங்கியதாக, சிவாஜிலிங்கம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
கைதிகளின் தற்போதைய நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.