410பேரின் விபரம் நாடாளுமன்றத்தில் ஒப்படைப்பு

364 0

sivasakthy-ananthan-720x480உடலில் குண்டுத் துகள்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்த 410 பேரின் விபரங்களை நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சமர்ப்பித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் 132பேர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், யுத்தத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள் குறித்த விபரங்களை வழங்குவதற்கு இழுத்தடிப்புச் செய்கின்றனர் எனவும் சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விலங்­குத்­தீனி (திருத்தச்) சட்­ட­மூலம் மீதான விவாதம் நடைபெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி நேரத்தின்போது, வடக்கில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது குண்டு மற்றும் ஷெல்
வீச்­சுக்­களால் பாதிப்­ப­டைந்து அவற்றின் துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் பாட­சாலை மாண­வர்கள், இளைஞர், யுவ­திகள் உள்­ளிட்ட பல தரப்­பட்­ட­வர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்சை வழங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை உடன் எடுக்­கப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்தேன்.

அச்சமயத்தில் பிரதமர் விபரங்களை வழங்குமாறும், தான் மீள்குடியேற்ற மற்றும் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி அவர்களை அவர்களது பிரதேச அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், நான் நான் வடக்கு மாகா­ணத்தின் ஐந்து மாவட்ட அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு கடிதம் மூலம்விப­ரங்­களை வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தேன். 65 நாட்­க­ளா­கி­விட்­டன. வெறு­மனே இரண்டு மாவட்ட அர­சாங்கஅதி­பர்­களே அந்த தக­வல்­களை வழங்­கி­யுள்­ளனர். அத­ன­டிப்­ப­டையில் யாழ்.மற்றும் வவு­னியா மாவட்­டத்­தினைச் சேர்ந்த 410 பேர் இவ்­வாறு குண்டு துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் உள்­ளனர். இவர்­களில் 132 பேர் பாட­சாலை மாண­வர்­க­ளாக உள்­ளனர். அதி­க­ள­வானோர் இளம் வய­தினைக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு உட­னடிச் சிகிச்­சைகள் அவ­சி­ய­மா­கின்­றன. ஆகவே இந்­தப்­பட்­டி­யலின் பிர­காரம் உட­னடி நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.