நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைது

269 0

ஏறாவூர் – தலவாய் பகுதியில் புதையல் தேடும் நோக்கில், நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நிலத்தை தோண்டும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் கெப் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் ஊறணி, கடுவளை, மொணராகலை, ஹேம்மாதகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment