கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தை மேலும் ஒரு வாரங்கள் வரை மூட வேண்டி ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதன்போது, இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, அப் பல்கலையின் உப வேந்தர் லக்ஷ்மன் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை இது குறித்து கலந்துரையாட, நிர்வாக சபைக்கு உபவேந்தரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கலைப் பீடத்தை மீளத் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.