சுவீடன் நாட்டில் கையெறி குண்டுவீச்சில் சிறுவன் பலி

321 0

201608240731393214_Boy-killed-in-grenade-attack-on-apartment-in-Sweden_SECVPFசுவீடன் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் மீது கையெறி குண்டு வீசியதில் சிறுவன் பலியானான்.சுவீடன் நாட்டில் கோதன்பர்க் என்ற நகரம் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் யூசுப் வார்சமியும், அவனது குடும்பத்தினரும் கோதன்பர்க் நகரத்துக்கு சென்று, அங்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த தங்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த வீட்டுக்குள் யாரோ கையெறி குண்டை வீசினர். அதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் யூசுப் வார்சமி படுகாயம் அடைந்தான். உடனடியாக அவன் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்த நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் தாமஸ் பக்ஸ்போர்க் கூறுகையில், “இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. விசாரிக்கிறோம்” என்றார்.

கையெறி குண்டு வீச்சு நடந்தபோது அந்த சிறுவனின் தாய், சகோதரி, சகோதரன் ஆகியோரும் அங்குதான் இருந்துள்ளனர். அவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்.