உத்தேச புதிய அரசியல் அமைப்பு சீர்திருந்த பயணத்தை நாடாளுமன்றத்துடன் நிறுத்திக்கொள்ள மேற்கொள்வதற்கான அனைந்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் தீர்மானம் மிக்க சூழல் தோன்றியுள்ளது.
புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டை பிளவுபடுத்தும் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாட்டின் வீழ்ச்சிக்கான பயணம் அதிலிருந்து ஆரம்பமாகும்.
எனவே, இதனை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் 76 உறுப்பினர்கள் அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும்.
இல்லையெனில், நாடாளுமன்றிற்கு குண்டொன்றை வைத்து தகர்க்க வேண்டும் என நாடானுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.