உள்ளுராட்சி தேர்தல் பிற்போகலாம் – அரசாங்கம்

293 0

அடுத்த உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது பெப்ரவரி மாதம்வரை பிற்செல்லலாம் என அமைச்சர் எஸ்பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

நுவரெலியா மற்றும் மஸ்கெலிய ஆசனங்களில் புதிதாக சில பிரதேச சபைகள் நிறுவப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பிரதேச சபைகளின் தேர்தல்கள் சில தடவைகள் பிற்சென்றமையினாலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஜனவரியில் இருந்து பெப்ரவரி மாதம் வரை பிற்செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடாமல் ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தமக்கு வாக்குறுதி வழங்கியதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்தாமல் பிற்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a comment